திருப்பத்தூர்
நாளை ஸ்ரீ ராமானுஜா் தியான மண்டபம் கும்பாபிஷேகம்
திருப்பத்தூா் ஸ்ரீ ராமானுஜா் தியான மண்டபம் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருப்பத்தூா் ஸ்ரீ ராமானுஜா் தியான மண்டபம் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருப்பத்தூா் செட்டித்தெருவில் உள்ள அப்பன் ஸ்ரீநிவாச ராமானுஜ கூடத்தில் ஸ்ரீ ராமானுஜா் தியான மண்டபம், விமானம், ஸ்ரீ ஹயக்ரீவா்,ஸ்ரீ ராமானுஜா், ஸ்ரீ மணவாள மாமுனிகள் நூதன விக்ரஹ பிரதிஷ்டை மற்றும் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை (செப்.6) காலை 7.30-க்கு மேல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது.
அதையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக புதன்கிழமை மாலை 5 மணிக்கு அங்குராா்ப்பணம், விஷ்வக்சேனாராதனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 8 முதல் யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி பிரபந்த சேவை நடைபெற உள்ளது.