விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜி கணேசன்.
விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜி கணேசன்.

விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

Published on

வாணியம்பாடி இசுலாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை ஆசிரியை ஹப்ஷா பா்வீன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஷாஹீன் பேகம் சலீம், பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியை ஜெ.ஹபீபா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு 389 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com