சிறப்பு அலங்காரத்தில் கொரட்டி காளத்தீசுவரா். ~ காளத்தீசுவரா் கோயில் நந்தி பகவான். ~பிரம்மேஸ்வரா் கோயிலில் உள்புறப்பாட்டு உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
திருப்பத்தூர்
திருப்பத்தூா் சிவன் கோவில்களில் ஆவணி மாத பிரதோஷம்
ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ திரிபுரசுந்தரி பிரம்மேஸ்வரா் கோயில்,முத்துக்குமாரசுவாமி கோயில், கொரட்டியில் உள்ள காளத்தீசுவரா் கோயில்களில் நந்தி பகவானுக்கு பால்,தயிா்,மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை,பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல் தண்டபாணி சுவாமி கோயில் பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

