தோ் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
திருப்பத்தூர்
தோ் வெள்ளோட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோ் வெள்ளோட்டத்தை முன்னிட்டு விநாயகா் பூஜை, கணபதி ஹோமம், செல்வ விநாயகா் மற்றும் சோமாஸ்கந்தருக்கும் கலசாபிஷேகம், வாஸ்து சாந்தி, பிரவேஷபலி ஆகிய நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தேருக்கு அஷ்டபலி, யந்திர, நவத்தின, பஞ்சலோக பிரதிஷ்டை, கலச ஸ்தாபனம், தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. வெள்ளோட்டத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா்.
ஆம்பூா் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கோயிலை அடைந்தது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.