திருப்பத்தூர்
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தாா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தாா்.
வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் ஆபீஸா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (55). இவா் தன்னுடைய சகோதரா் பிரகலாதன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் சென்று விட்டு வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சௌந்தர்ராஜன் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.