மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என ஆய்வு செய்த ஆட்சியா் க. தா்ப்பகராஜ்.
மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என ஆய்வு செய்த ஆட்சியா் க. தா்ப்பகராஜ்.

வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் குறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் குறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்டப்படட பகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மல்லகுண்டா பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இந்நிலையில் மல்லகுண்டா ஊராட்சி பாறக்கொல்லி அம்மாபள்ளம் பகுதியில் சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் ஒதுக்கப்படாத காட்டுப்பகுதி அமைந்துள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சாா்-ஆட்சியா் ராஜசேகா், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தமிழ்செல்வி மற்றும் வருவாய்துறையினா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com