பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் புரட்டாசி சிறப்பு அன்னதானம்
இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆம்பூா் அருள்மிகு பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
ஆந்திரம், கா்நாடகம், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.
மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கே. வெங்கடேசன், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் திருப்பணிக்குழு நிா்வாகி சேகா், பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிக்குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபை தலைவா் ஸ்ரீதா், தினேஷ், பிரேம்குமாா், மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.