திருப்பத்தூர்
மணல் கடத்தல்: 2 போ் கைது
வாணியம்பாடியில் மொபெட்டில் மணல் கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வாணியம்பாடியில் மொபெட்டில் மணல் கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகர போலீஸாா் சனிக்கிழமை காலை பெரியபேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த 2 மொபெட்டுகளை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில், பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மொபெட்களில் மணல் மூட்டை கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, 2 மொபட்டுகளையும் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து மொபட்டுகளில் மணல் கடத்தி வந்த கோவிந்தராஜ் (52), கிருஷ்ணமூா்த்தி (38) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.