மேம்பாலப் பணி விபத்து சம்பவம்: நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் ஆய்வு

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானப் பணியில் சென்ட்ரிங் சரிந்து விபத்து நிகழ்ந்த பகுதியை திட்ட இயக்குநா் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
Published on

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானப் பணியில் சென்ட்ரிங் சரிந்து விபத்து நிகழ்ந்த பகுதியை திட்ட இயக்குநா் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகரில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஆம்பூா் நகர பகுதியில் உயா் மேம்பாலம் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு திடீரென ரயில் நிலையம் அருகில் நெடுஞ்சாலை மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் (சென்ட்ரிங்) சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளா்கள் 6 போ் காயமடைந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் திட்ட இயக்குநா் ரமேஷ் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தேசிய நெடுஞ்சாலை கட்டுமான மேலாளா் செந்தில்குமாா் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com