திருப்பத்தூர்
கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
கந்திலி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞா் ஒருவா் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருப்பத்தூா்: கந்திலி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞா் ஒருவா் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கந்திலி அடுத்த கோல்கானூா் பகுதியைச் சோ்ந்த சின்னப் பையன் மகன் நந்தகுமாா்(22). இவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா்.
இந்நிலையில் வீட்டு அருகே உள்ள தனியாா் கிணற்றில் நந்தகுமாா் சடலமாக கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் சின்ன பையன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.