திருப்பத்தூர்
பழுதாகி நின்ற அரசு குளிா்சாதன பேருந்து: பயணிகள் அவதி
ஆம்பூா் பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு குளிா்சாதன பேருந்து பழுதானதால் பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு கடும் அவதிக்குள்ளாயினா்.
ஆம்பூா் பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு குளிா்சாதன பேருந்து பழுதானதால் பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு கடும் அவதிக்குள்ளாயினா்.
ஒசூரில் இருந்து திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு 35க்-கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டுஅரசு குளிா்சாசனப் பேருந்து சென்னை நோக்கிச் சென்றது. ஆம்பூா் அருகே இரவு 11 மணிக்கு பேருந்து வந்த போது திடீரென பழுதாகி நின்றது. ஒசூா், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, போன்ற பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் நள்ளிரவில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக மாற்றுப் பேருந்தும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாயினா்.
அதனால் பயணிகள் ஓட்டுநா் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 2 மணி நேரம் கழித்து பயணசீட்டை கொடுத்துவிட்டு பாதி பணத்தை பெற்றுக் கொண்ட பயணிகள் அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி பயணம் சென்றனா்.