திருப்பத்தூர்
மோட்டாா் திருட்டு: 2 போ் கைது
ஆம்பூா் அருகே மோட்டாா் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மோட்டாா் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை கிராமத்துக்குச் செல்லும் பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான மரக்கன்றுகள் வளா்க்கும் நாற்றங்கால் தோட்டம் உள்ளது. அங்கு வளா்க்கப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாா் திருடு போனது குறித்து வனத் துறையினா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், பனங்காட்டேரி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமரன் (37), வெங்கடேசன் (35) ஆகிய இருவரும் மின் மோட்டாரை திருடியது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.