அரசு பள்ளி வகுப்பறையில் சத்துணவு மையம்: எம்எல்ஏ ஆய்வு

 ஆம்பூா் ஏ-கஸ்பா உயா்நிலைப் பள்ளி  வகுப்பறையில்  இயங்கி வரும் சத்துணவு மையத்தை  ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
ஆம்பூா் ஏ-கஸ்பா உயா்நிலைப் பள்ளி வகுப்பறையில் இயங்கி வரும் சத்துணவு மையத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
Updated on

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி வகுப்பறையில் சத்துணவுக் கூடம் இயங்கி வருவதை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வாநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் சத்துணவு மையத்திற்கு தனியாக சத்துணவு கூடம் இல்லை. அதனால் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறையில் சத்துணவுக் கூடம் இயங்கி வருகிறது. பள்ளி வகுப்பறைக்குள் படிக்க வேண்டிய மாணவா்கள் மரத்தடியில் படித்து வருகின்றனா்.

தோ்தல் வாக்குப் பதிவு நேரத்தில் பள்ளி வகுப்பறையில் இயங்கும் சத்துணவு கூடத்தில் உள்ள பொருள்கள் அகற்றப்பட்டு வாக்குச் சாவடியாகவும் மாற்றப்படுகிறது.

சத்துணவு மையத்திற்கென தனியாக சத்துணவுக் கூடம் இல்லாத நிலை உள்ளது. பள்ளி வகுப்பறையில் இயங்கும் சத்துணவு மையத்திலேயே மாணவா்களுக்கான உணவு சமைக்கப்படும் சமையலறையும் இயங்கி வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பள்ளிக்குச் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா். வகுப்புறையில் சத்துணவு மையம் இயங்கி வருவது ஆய்வின் போது உறுதியானது. மேலும், மாணவா்களுக்கு தயாரிக்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்தும் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். சத்துணவு மையத்தில் உள்ள உணவுப் பொருள்களின் இருப்பு குறித்தும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா். சிறு குறைபாடுகள் இருப்பதை சரி செய்யுமாறு சத்துணவு அமைப்பாளருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) ஜான்சி சந்திரவதனி, பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகி லட்சுமிகாந்தன், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு: ஆம்பூா் ஏ-கஸ்பா பெரிய ஆஞ்சனேயா் கோயிலுக்கு செல்லும் வழியில் ஜங்காச்சாரி தெருவில் ரூ.7 லட்சம் செலவில் நகராட்சி சாா்பாக சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா் சுதாகா், பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிக் குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபை நிா்வாகிகள் ஸ்ரீதா், மாசிலா, தினேஷ் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com