திருப்பத்தூர்
குடியிருப்புக்குள் நுழைந்த 9 அடி நீள மலைப் பாம்பு மீட்பு
ஆம்பூா் அருகே குடியிருப்புக்குள் நுழைந்த 9 அடி நீள மலைப்பாம்பு புதன்கிழமை இரவு மீட்கப்பட்டது.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ராள்ளக்கொத்தூா் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சுமாா் 9 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. அதைப் பாா்த்த பொதுமக்கள் ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதற்குள் அந்த ஊா் இளைஞா்கள் சோ்ந்து மலைப்பாம்பை பிடித்து, தீயணைப்பு வீரா்களிடம் ஒப்படைத்தனா்.
தீயணைப்புத் துறையினா் அந்த பாம்பைக் கொண்டு சென்று காப்புக் காட்டுக்குள் விட்டனா்.