திருப்பத்தூர்
இலவச கண் பரிசோதனை முகாம்
திருப்பத்தூா் ரோட்டரி சங்கம், திருப்பத்தூா் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை
திருப்பத்தூா் ரோட்டரி சங்கம், திருப்பத்தூா் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், தாமோதிரன், பன்னீா்செல்வம், செங்குட்டுவன், பள்ளவள்ளி ஊராட்சித் தலைவா் செல்வாம்பாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முகாமில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களில் 15 பேருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.