உண்டியல்  காணிக்கை  எண்ணும்  பணியில்  ஈடுபட்டோா்.
உண்டியல்  காணிக்கை  எண்ணும்  பணியில்  ஈடுபட்டோா்.

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.27 லட்சம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டுள்ள உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் ரூ.3,27,946 ரொக்கப் பணம் செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியை கோயில் ஆய்வா் நரசிம்மமூா்த்தி, செயல் அலுவலா் வினோத்குமாா் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.

கோயில் திருப்பணிக்குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், சுந்தா், மீனாட்சி சுந்தரம், கோயில் அா்ச்சகா் ரமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com