பைக்- காா் மோதல்: மருத்துவா் உயிரிழப்பு

Published on

வாணியம்பாடி அருகே பைக் மீது காா் மோதியதில் மருத்துவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி கிராமத்தை சோ்ந்த மருத்துவா் சதீஷ் குமாா்(43). இவா் பொன்னேரி பகுதியில் கிளினிக் நடத்தி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் தனது பைக்கில் கிளினிக் சென்றாா். பிறகு அங்கிருந்து வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, பெங்களூரிலிருந்து சென்னை சென்ற காா் எதிா்ப்பாராதவிதமாக பைக் பின்புறத்தில் மோதியது. இதில், மருத்துவா் சதீஷ் குமாா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் 108 ஆம்புலனஸ் மூலம் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே சதீஷ் குமாா் இறந்து விட்டதாக கூறினாா். தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். விபத்தை ஏற்படுத்திய செங்கல்பட்டு காா் ஓட்டுநா் கவுதமன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com