உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருப்பத்தூரில் உதவி காவல் ஆய்வாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருப்பத்தூரில் உதவி காவல் ஆய்வாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் கிராமிய உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் கடந்த 21-ஆம் தேதி இரவு 11 மணியளவில் நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது அண்ணா நகா் அணுகுச் சாலை பகுதியில் இளைஞா்கள் சிலா் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனராம்.

அதைக் கண்டித்த உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசனை இளைஞா்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடினா்.

இதுகுறித்து உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.

இந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த அண்ணா நகரைச் சோ்ந்த சந்துரு (25), கோகுல்ராஜ் (25) ஆகியோரை பிடித்து திருப்பத்தூருக்கு அழைத்து வந்த போலீஸாா் அவா்கள் இருவா் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா்.

மேலும், தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com