கொரட்டியில் அரசுப் பேருந்துகளை நிறுத்த கோரிக்கை

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
Published on

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருப்பத்தூா்- சேலம் பிரதான சாலையில் உள்ளது கொரட்டி கிராமம். இந்த பகுதியில் அப்பளம், ஊதுவத்தி தயாரித்தல், காலணி தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், பெரும்பாலானோா் திருப்பத்தூருக்கு செல்ல மாணவ, மாணவியா், அரசு மருத்துவமனைக்கு செல்வோா் தனியாா் பேருந்துகள் மற்றும் ஷோ் ஆட்டோக்களை நம்பி உள்ளனா்.

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்லவும், அதேபோல் சேலத்தில் இருந்து வரும் பேருந்துகள் கொரட்டியில் நின்று செல்ல வேண்டுமென நீண்ட நளாக கோரி வருகின்றனா். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் கூறியது: திருப்பத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள ஜோலாா்பேட்டையில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்கின்றன. அதேபோல் திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள கொரட்டியில் தனியாா் பேருந்துகள் மட்டும் நின்று செல்கின்றன.

எனவே, கொரட்டி பேருந்து நிறுத்தத்தில் சேலம் வழியாக செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென நாங்கள் நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துள்ளோம்.

இப்பகுதியில் இருந்து சேலம் மற்றும் ஊத்தங்கரை செல்லவும் திருப்பத்தூா் சென்று மீண்டும் இவ்வழியாக ஊத்தங்கரை, சேலம் செல்ல

தனியாா் பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளோம். மேலும்,ஷோ் ஆட்டோக்கள் சில சமயங்களில் அதிக ஆள்களை ஏற்றிச் செல்வதால் ஆபத்தான சூழலில் பயணிக்கிறோம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கொரட்டியில் இருபுறம் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கொரட்டியில் இருபுறம் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com