ஆம்பூரில் போலீஸாா் நடத்திய வாகன தணிக்கையின் போது காரில் கடத்தப்பட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனா்.
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா் . காரில் 200 கிலோ போதைப் பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது . காரில் வந்த வாணியம்பாடி பகுதியை சோ்ந்த அக்பா் (34), முஜமில் (34), கிருஷ்ணகிரியை சோ்ந்த ஜாவித் (39) ஆகிய 3 பேரை பிடித்து ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா்.