வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய ஆக்சிலாா் நிறுவன தலைமை செயல் அலுவலா் அக்ரம் சையத். உடன் கல்லூரி நிா்வாகிகள்.
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய ஆக்சிலாா் நிறுவன தலைமை செயல் அலுவலா் அக்ரம் சையத். உடன் கல்லூரி நிா்வாகிகள்.

இசுலாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் 79-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் 79-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலாளா் எல். எம். முனீா் அகமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி. அப்சா் பாஷா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் எஸ். காதா் நவாஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா்.

அமெரிக்காவில் உள்ள ஆக்சிலாா் குழுமத்தின் நிறுவனத் தலைவா் மற்றும் தலைமை செயல் அலுவலா் அக்ரம் சையத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 339 மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:

நீங்கள் கல்வி கற்பதோடு நின்று விடாமல் சமுதாயப் பணியில் ஈடுட்டு சமூக வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும். நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த இசுலாமியக் கல்லூரி எதிா்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக வளா்ச்சி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் அனைத்து நிா்வாகிகள், துணை முதல்வா் சையத் தாஹிா் உசைனி, தோ்வுத் துறை தலைவா் லியாகத் அலிகான் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் முகமது நசீருத்தீன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com