திருப்பத்தூர்
ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சாத்தம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: சாத்தம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ-க்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.