காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: திருப்பத்தூா் எஸ்.பி.

திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளாா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 12 காவல் வாகனங்கள் (8 மோட்டாா் சைக்கிள்கள்,நான்கு சக்கர வாகனங்கள் 4) உள்ளன.

அவை வரும் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணமாக ரூ.100, மோட்டாா் சைக்கிள் வாகனங்கள் வாங்க முன்பணமாக ரூ.500, நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

ரசீது வரும் 16 முதல் 18-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மோட்டாா் சைக்கிள்கள் ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் 12 சதவீத ஜிஎஸ்டியும், நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் எடுத்தவா்கள் 18 சதவீத ஜிஎஸ்டியும் கட்ட வேண்டும்.

ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூா் ஆயுதப்படை டிஎஸ்பி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com