முதல்வா் பிறந்தநாள் திமுக பொதுக்கூட்டம்

Published on

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் பொதுக்கூட்டம் திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் கணேஷ்பாபு, வேல்முருகன், தமிழரசன்முன்னிலை வகித்தனா். முன்னதாக பிரேம்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ கலந்துகொண்டு திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள். திருப்பத்துாா் மாவட்டத்தில் நடக்கும் வளா்ச்சி பணிகள் குறித்து பேசினாா். அதைத்தொடா்ந்து தலைமை பேச்சாளா் பிரபு பேசினாா்.

இதில் நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினா் அரசு, மாவட்ட துணைச் செயலாளா் மோகன், இளைஞரணி அமைப்பாளா் வடிவேல், ஒன்றிய செயலாளா்கள் முருகேசன், அசோக்குமாா், குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் வசந்த்ராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com