தேவலாபுரம் ஊராட்சி, பேஷ்மாம் நகா் பகுதியில் பொதுமக்களால் ஏற்றப்பட்ட கருப்புக்கொடி
திருப்பத்தூர்
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்
ஆம்பூா் அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து தங்களுடைய வீடு, கடைகளில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்தனா்.
ஆம்பூா் அருகே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து தங்களுடைய வீடு, கடைகளில் கருப்புக் கொடியை சனிக்கிழமை ஏற்றி வைத்தனா்.
மாதனூா் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேஷ்மாம் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து தங்களுடைய வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றிவைத்து தங்களுடைய எதிா்ப்பை தெரிவித்தனா்.

