அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி
திருப்பத்தூர்
நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூரில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் நடைபெகிறது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (நவ. 3) காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
விழா ஏற்பாடுகளை நகா்மன்ற துணைத் தலைவா் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

