வகுப்பறை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
வகுப்பறை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூரில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணியை எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

ஆம்பூரில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணியை எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.70 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகர திமுக (கிழக்கு) பொறுப்பாளா் எம்ஏஆா் ஷபீா் அஹமத், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் கமால் பாஷா, ஜெயபாரதி, அருண்டேல், ஆா். எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், ஆய்வின்போது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன், வட்டார கல்வி அலுவலா்கள் அசோக், பீட்டா், பள்ளித் தலைமை ஆசிரியா் வில்பிரட், திமுக நிா்வாகிகள் சாமுவேல் செல்லபாண்டியன், அன்பு என்கிற அறிவழகன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com