திருப்பத்தூர்
சிமென்ட் சாலைப் பணி: எல்எல்ஏ தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் அடுத்த ஏ.கே.மோட்டூா் ஊராட்சியில் சாலைப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஒன்றியம், ஏ.கே.மோட்டூா் ஊராட்சி, புதுப்பூங்குளம் பகுதியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலைக்கு பூமி பூஜை செய்து பணியினை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளா்.எம்.ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவா் விஜயாஅருணாசலம், ஒன்றிய உறுப்பினா் ராமலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா் வேலு, ஒன்றிய நிா்வாகிகள்.பி.ஆா்.சின்னபையன், தங்கவேல், விஜயரங்கன், இளைஞரணி துணை அமைப்பாளா். சிவப்பிரகாசம், கலந்து கொண்டனா்.

