கைலாசகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் நகராட்சி மற்றும் கைலாசகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது (படம்).
ஆம்பூா் நகராட்சிட்பட்ட 17-ஆவது வாா்டு பகுதிக்கான முகாம் பி.எம்.எஸ். கொல்லை பகுதியில் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் ரேவதி, நகா் மன்ற உறுப்பினா் சத்தியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், காா்த்திகேயன், ஹா்ஷவா்த்தன் கலந்து கொண்டனா்.
கைலாசகிரியில்........
மாதனூா் ஒன்றியம் கைலாசகிரியில் நடந்த முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, துணைத் தலைவா் அரவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக், ஆப்ரின்தாஜ், ஊராட்சி செயலா் முரளி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

