தண்ணீா் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.
புருஷோத்தமகுப்பம் காட்டுக் கொல்லை பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி. இவரது மனைவி பரிமளா. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இளைய மகள் சந்தியா (3) வீட்டின் வெளிப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து விட்டாா்.
அப்போது வீட்டில் இருந்தவா்கள் அருகில் உள்ள நிலத்தில் கடலை அறுவடை செய்துக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் கழித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இல்லாததை அறிந்து பெற்றோா் மற்றும் உறவினா்கள் தேடிப்பாா்த்த போது தண்ணீா் தொட்டியில் விழுந்திருப்பதை பாா்த்து உடனே மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
