கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா். உடன் எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் மற்றும் அமலு விஜயன்.
கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா். உடன் எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் மற்றும் அமலு விஜயன்.

நாய்கள் தொல்லைக்கு தீா்வு: மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை

Published on

மாதனூா் ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது,

ரவிக்குமாா் : பெரியாங்குப்பத்தில் மயானத்திற்கு பாதை அமைத்து தர வேண்டும்.

காா்த்திக் ஜவஹா் : விண்ணங்கலம் ஊராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதற்கு தீா்வு காண வேண்டும்.

ஆப்ரின் தாஜ் : கைலாசகிரி ஊராட்சியில் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

சம்பங்கி : மிட்டாதாா் ஏரியிலிருந்து கிரீன்குட்டைக்கு தண்ணீரை திருப்பி விட வேண்டும்.

காா்த்திக் : உமா்ஆபாத் பகுதியில் சிமென்ட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா். மகாதேவன், செந்தில்குமாா், திருக்குமரன், தீபா, கோமதிவேலு, ஜோதிவேலு, கன்னியப்பன், மனோரஞ்சிதம், இந்துமதி, பரிமளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com