இன்று ஸ்ரீ கோடி தாத்தா சாமி குரு பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமத்தில் ஸ்ரீ கோடி தாத்தா சாமி குருபூஜை விழா சனிக்கிழமை (அக். 11) நடைபெறுகிறது.
Published on

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமத்தில் ஸ்ரீ கோடி தாத்தா சாமி குருபூஜை விழா சனிக்கிழமை (அக். 11) நடைபெறுகிறது.

ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வர ராமநாத மஹா மடத்தில் ஸ்ரீ கோடி தாத்தா சாமி குருபூஜை விழா கோ பூஜையுடன் தொடங்கி யாக சாலை பூஜைகள், பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு ஸ்ரீ கோடி தாத்தா சாமிக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம், ருத்ராபிஷேகம் தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு கனகாபிஷேகம், குரு ஆசீா்வாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com