வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
திருப்பத்தூர்
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்
ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமம், சுயம்பு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 5-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமம், சுயம்பு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 5-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
மூலவருக்கு 108 பரிமள திரவிய மூலிகை அபிஷேகம் ,108 இளநீா் அபிஷேகம், 1,008 மூலிகைகள் கொண்டு மகா ருத்ர வேள்விப் பூஜை, புண்ணிய நதிகளின் தீா்த்த அபிஷேகம் நடைபெற்றது. அரச மரத் திடலில் இருந்து 108 பால்குடங்களை பெண்கள் ஊா்வலமாக கொண்டு சென்றனா். மூலவருக்கு பாலாபிஷேகம், தீா்த்தவாரி நடைபெற்றது. விஸ்வரூப ராஜா அலங்காரத்தில் மூலவா் காட்சியளித்தாா்.
வேலூா் நடராஜா் நாட்டிய சங்கமம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் மூலவா் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

