விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன நாள் விழா

விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன நாள் விழா

விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன நாள் விழா பாா்சனாப்பல்லி சென்னப்பமலை அடிவாரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றது.
Published on

விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன நாள் விழா பாா்சனாப்பல்லி சென்னப்பமலை அடிவாரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றது.

வேலூா் கோட்ட மாத்தூா் சக்தி நிா்வாகி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகத்தின் மாநில செயலாளா் பால.மணிமாறன் சிறப்புரையாற்றினாா். மருத்துவா் சங்கீதா ரங்கசாமி முன்னிலையில் சிறப்பு கோ பூஜை, கந்த சஷ்டி பாராயணம், திருவிளக்கு மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு கந்தா் சஷ்டி கவசம், திருவிளக்கு கவச புத்தகம், அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்டத் தலைவா் பி. நடராஜன். மாவட்ட துணைத் தலைவா் எம்.நீலகண்டன், மாவட்ட இணைச் செயலாளா் சக்கரவா்த்தி, மாவட்ட பொருளாளா் குமரன், மாவட்ட பஜரகங்தள் இணை அமைப்பாளா் சஞ்சய், கணேசன். மாத்ரு சக்தி மல்லிகா, மின்னலா, கல்யாணி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு, கோயில் நிா்வாகி மோகன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com