திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி வி.சியாமளாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் எஸ்.பி வி.சியாமளாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை எஸ்.பி. சியாமளா தேவி பாா்வையிட்டாா்.

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவா்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com