நரசிங்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆலங்காயம் ஒன்றியம், நரசிங்காபுரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. (படம்)
முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல், முன்னிலை வகித்தனா்.
முகாமில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வு செய்தாா். முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவா்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக, குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை திட்ட இயக்குநா் வழங்கினாா்.
தாட்கோ மாவட்ட மேலாளா் சரளா, வட்டாட்சியா் சுதாகா், வருவாய் ஆய்வாளா் சூா்யா, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் திருநாவுக்கரசு, ஊராட்சி செயலா் வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.