கரும்பூரில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

Published on

மாதனூா் ஒன்றியம், கரும்பூரில் சனிக்கிழமை(அக்.18) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் சனிக்கிழமை கரும்பூா் இந்து மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் துத்திப்பட்டு, கைலாசகிரி, நரியம்பட்டு, அயித்தம்பட்டு, மிட்டாளம், சோமலாபுரம், சாத்தம்பாக்கம், பெரியகொம்பேஸ்வரம், தேவலாபுரம், அரங்கல்துா்கம், கதவாளம், பாா்சனப்பள்ளி, வெங்கடசமுத்திரம், குமாரமங்கலம், கரும்பூா், மோதகப்பள்ளி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் பொது மருத்துவம், நீரிழிவு நோய், குழந்தைகள் நலம், இருதய மருத்துவம், எலும்பு முறிவு, .காது-மூக்கு-தொண்டை- கண்- பல் மருத்துவம், பிசியோதெரஃபி, நரம்பியல், ஸ்கேன் சேவை, நுரையீரல், பொது அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், தோல், மகப்பேறு மருத்துவம், மனநல மருத்துவம் வழங்கப்படும்.

எனவே, மருத்துவ சேவை தேவைப்படும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com