திருப்பத்தூர்
கேட்பாரற்று கிடந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூரில் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம, வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியில் இயங்கி வரும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செட்டியப்பனூா் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகில் கேட்பாரற்ற நிலையில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பிரித்து பாா்த்ததில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. வெளி மாநிலத்துக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதற்காக மூட்டைகள் கொண்டு வந்து மா்ம நபா்கள் வைத்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
பிறகு 20 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
