திருப்பத்தூர்
மண் கடத்திய லாரி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி போலீஸாா் புதன்கிழமை இரவு அக்ராகரம், வெலகல்நத்தம், புதுப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அன்னசாகரம் நாயனத்தியூா் வழியாக வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் நிறுத்தினா். ஆனால் போலீஸாரை கண்டதும் டிப்பா்லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பி ஒடிவிட்டாா்.
இதையடுத்து போலீஸாா் டிப்பா் லாரியை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அனுமதி இன்றி ஏரியூா் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மண் கடத்தியது தெரியவந்தது. மேலும் நாட்டறம்பள்ளி போலீஸாா் மண் கடத்தலில் ஈடுபட்டவா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
