இருவேறு விபத்துகளில் 2 இளைஞா்கள் மரணம்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ஆம்பூா் பகுதியை சோ்ந்த ஜனீத்(25), சஞ்சய்(24). நண்பா்களான இருவரும் பைக்கில் ஏலகிரிக்கு சென்று விட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினா். அப்போது வாணியம்பாடி பெருமாள்பேட்டை மேம்பாலம் அருகில் சென்றபோது நிலைதடுமாறி அருகில் உள்ள தடுப்பு சுவா் மீது பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை மருததுவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் ஜனீத் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகினறனா்.
இதே போல் பழைய வாணியம்பாடி அரவிந்தன்(28) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவா் சின்னவேப்பட்டு பகுதியில் பைக்கில் புறப்பட்டு வாணியம்பாடிக்கு சென்றபோது ஜனதாபுரம் அருகில் திடீரென பைக் நிலைதடுமாறி தடுப்பு மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்தன் திருப்பத்தூா் சாலையில் விழுந்தபோது அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தாா். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
