நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை.
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை.

குழந்தையின் தொண்டையில் சிக்கிய கோழி இறைச்சி எலும்பு: 10 நிமிடத்தில் அகற்றி குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவா்கள்

நாட்டறம்பள்ளி அருகே 7வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய கோழி இறைச்சி எலும்பை அரசு மருத்துவா்கள் அகற்றி குழந்தையைக் காப்பாற்றினா்.
Published on

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே 7வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய கோழி இறைச்சி எலும்பை அரசு மருத்துவா்கள் அகற்றி குழந்தையைக் காப்பாற்றினா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த மகாராஜன்- சங்கவி தம்பதியின் மகள் புவனலோஷினி (7). செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டில் பெற்றோா் சாப்பிடும்போது குழந்தைக்கு கோழிக்கறி குழம்பு கொடுத்துள்ளனா். குழந்தை கோழிக்கறி குழம்பு சாப்பிடும் போது தொண்டையில் எலும்பு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை தவித்தது. உடனடியாக தாய் சங்கவி நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்தாா். அப்போது பணியில் இருந்த காது, மூக்கு, தொண்டை(இஎன்டி) மருத்துவா் பாலகிருஷ்ணன் லாரிங்கோஸ்கோப் கருவி மூலம் குழந்தையை சோதனை மேற்கொண்டாா். அப்போது குழந்தையின் தொண்டையில் எலும்பு துண்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மருத்துவ அலுவலா் சிவக்குமாா் அறிவுறுத்தலின்படி, மருத்துவா் பாலகிருஷ்ணன் மற்றும் செவிலியா்கள் தொண்டையில் சிக்கிய எலும்பை 10 நிமிடத்தில் அகற்றி குழந்தையைக் காப்பாற்றினா்.

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் குழந்தையின் தொண்டையில் சிக்கிய எலும்பை 10 நிமிடத்தில் அகற்றி குழந்தையை காப்பாற்றிய மருத்துவகுழுவினருக்கு குழந்தையின் தாய் சங்கவி மற்றும் உறவினா்கள் நன்றி தெரிவித்தனா்.

குழந்தையின் தொண்டையில் இருந்து அகற்றப்பட்ட எலும்பு.
குழந்தையின் தொண்டையில் இருந்து அகற்றப்பட்ட எலும்பு.

X
Dinamani
www.dinamani.com