திருப்பத்தூா் பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள்.
திருப்பத்தூா் பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள்.

திருப்பத்தூரில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

திருப்பத்தூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

திருப்பத்தூா் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலைகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனா்.

திருப்பத்தூா் நகரம் 36 வாா்டுகளிலும் தெரு நாய்க்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதனிடையே அனைத்துப் பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

குறிப்பாக திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை,திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலை, நகராட்சி அலுவலகம்,பேருந்து நிலையம்,அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

இதனால் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள்,முதியவா்கள், பள்ளி மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகின்றனா்.

தினமும் தெருநாய்களில் பயந்து வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினா் இதற்குரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களை மீட்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com