திருப்பத்தூர்
காவலா்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம்
காவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேலூா்: காவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின்போது உயிா்நீத்த காவலா்கள் மற்றும் அமைச்சு பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை தமிழக முதல்வா் மு. கருணாநிதி வழங்கினாா். அதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின்போது உயிரிழந்த காவலரின் வாரிசுதாரா் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட எஸ்.பி. ஆ. மயில்வாகனன் வழங்கினாா்.
