பாலாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆம்பூா் அருகே பாலாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாலாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா் மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூா் மாவட்டத்தில் பாலாறு கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையினா் பாலாறு கரையோர பகுதிகளுக்கு சென்று எச்சரிக்கை செய்து வருகின்றனா். கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும் பாலாற்றில் குளிக்கவோ, விளையாடவோ கூடாது என எச்சரித்துள்ளனா்.

துத்திப்பட்டு ஊராட்சியில் வட்டாட்சியா் ரேவதி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களை எச்சரித்தனா்.

மேலும், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினாா். வெள்ளம் ஏற்பட்டால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்கான முகாம் அமைப்பதற்கான இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com