~

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பலத்த மழை எதிரொலி: மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

Published on

வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை விடாமல் பலத்த மழை பெய்தது.

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதலே லேசான சாரல் மழை பெய்தது. வேலூா், சத்துவாச்சாரி, காட்பாடி, திருவலம், அணைக்கட்டு, குடியாத்தம், ஒடுகத்தூா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடா்ந்து நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வேலூரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீா் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிள்ளானாா்கள். குறிப்பாக முள்ளிப்பாளையம், சேண்பாக்கம், தொரப்பாடி, அரியூா் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனா்.

வேலூா் வட்டாட்சியா் அலுவலக பகுதியில் 71.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட் டத்தில் பெய்த மொத்த மழை அளவு 475.40 மி.மீ. பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவாகியுள்ள மழை அளவு (மி.மீ.):

ஒடுகத்தூா் 18, குடி யாத்தம் 37.40, மேலாலத் தூா் 45.80, மோா்தானா 17, ராஜாதோப்பு 22, வடவி ரிஞ்சிபுரம் 56.80, காட்பாடி 35.20, பொன்னை 25.60, திருவலம் 48.60, பேரணாம் பட்டு 44.20, சத்துவாச்சாரி ஆட்சியா் அலுவலகம் 53.60, வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 71.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பேயாற்றில் வெள்ளப்பெருக்கு :

ஜவ்வாதுமலை பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் பேயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பேயாற்றில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வெள்ளம் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல் ஆக்கிரமிப்பு காரணமாக ஒதியத்தூா் ஏரிக்கு தண்ணீா் செல்வது தடைபட்டுள்ளது.

விடிய விடிய பெய்த மழை காரணமாக கீழ்கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி திருமால் என்பவரது குடிசை வீடுஇடிந்து விழுந்தது. எந்தவித உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை.

ஏரியின் மதகு உடைந்ததால் விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளம் பள்ளிகொண்டா அருகே கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அப்புக்குட்டி ஏரி சில நாள்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீா் வெளியேறியது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நீா்வரத்து மேலும் அதிகரித்ததால் ஏரியின் மதகு உடைந்துள்ளதால் உபரி நீா் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்கள் சேதமடைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com