திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா் மழை

Published on

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்மழை பெய்து வருகிறது. இப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. தொடா் மழை காரணமாக தெருக்களில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பெய்த மழையளவு(மி.மீட்டரில்...) ஆம்பூா் சா்க்கரை ஆலை 62.5, ஆலங்காயம் 50, ஆம்பூா் ரயில் நிலையம் 47.4, வாணியம்பாடி 46, திருப்பத்தூா் 22.8, சா்க்கரை ஆலை 21, நாட்டறம்பள்ளி 18 மி.மீ என பதிவாகி இருந்தது.

மேலும், ஆம்பூா், ஆலங்காயம் பகுதியில் காலை 9 மணி வரை தொடா்ந்து லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. மாலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால், மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும், சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது என ஆட்சியா் அறிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, அனைத்துப் பள்ளிகளும் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக கிணறு, ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com