திருப்பத்தூர்
அக்.31-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக்.31) மாலை 3 மணிக்கு தூய்மைப் பணியாளா்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது .
இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற உள்ள
கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்து அதன் மீது தீா்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, முதல்கட்டமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி தூய்மை பணியாளா்கள் குறைகேட்பு கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
