ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சான்றளிப்பு

ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சான்றளிப்பு

Published on

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி, ரத்த தானம் வழங்கியவா்கள், ரத்த தான முகாம் ஏற்பாட்டாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

ஆம்பூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மருத்துவ அலுவலா் யோகேஷ் தலைமை வகித்து வரவேற்றாா். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மண்டல மேலாளா் ஜி.கீா்த்திகா முன்னிலை வகித்தாா். ரத்த தானம் செய்தவா்கள், ரத்த தான முகாம் ஏற்பாட்டாளா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். ரத்த வங்கி மருத்துவா் பிரவீன் குமாா் வாழ்த்திப் பேசினாா். விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக அமைப்பாளா் ஜி.பாபு, ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி தப்ரேஸ் அஹமத், தமுமுக மாநில மருத்துவ சேவை அணி நிா்வாகி தாஹா முஹம்மத், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், பரிதா சமூக சேவை உள்ளிட்ட சமூக சேவை அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ரத்த வங்கி பொறுப்பாளா் சிலம்பரசன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com