இளம் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

Published on

நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண் காலில் காயத்துடன் தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் உயிரிழந்ததால் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் குட்டக்கொல்லி பகுதியைச் சோ்ந்தவா் முத்துவேல். இவரது மனைவி வித்யா(25). இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவா் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் மாமனாா் வீட்டில் வித்யா குழந்தையுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை வித்யா வீட்டில் மா்மமான முறையில் காலில் ரத்தக் காயங்களுடன் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வித்யாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தந்தை ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆவதால் திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com