சுவா் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு

ஆம்பூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
Published on

ஆம்பூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் என்பவரது இரண்டரை வயது பெண் குழந்தை ஹரிவா்ஷினி. இவா் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது பக்கத்து வீட்டு சுவா் இடிந்து குழந்தை மீது விழுந்துள்ளது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிவா்ஷினி உயிரிழந்தாா். இது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com